புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:29 IST)
அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
 
இது 2015 ஆண்டிற்கு பிறகு பெய்யும் அதீத கனமழை என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்