9 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர் வீர்பத்ர சிங். ஆறு முறை ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் அவருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து அவர் மீண்டிருந்தாலும் அவரது உடல் நிலையில் தொடர் பாதிப்புகள் தென்பட்டன.