ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா மரணம்

வியாழன், 20 மே 2021 (09:24 IST)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா கொரோனா தொற்றால் மரணம். 

 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா 1980-81 காலகட்டத்தில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தார். அரியானா மற்றும் பீகார் மாநில கவர்னராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 
 
முதுமை காரணமாக ஓய்வில் இருந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்