வெள்ளத்தில் மூழ்கியவர்களை காப்பாற்றிய ’11 வயது சிறுவன் ’ : வைரல் தகவல்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (20:05 IST)
கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலம் எங்கும் முக்கிய  ஆறுகளில் இருந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இது மக்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியுள்ளது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோனிபுட் என்ற பகுதியில் ஒரு தாய் மற்றும் 2 குழந்தைகள் ஆற்றைக் கடக்க முயன்றனர். ஆனால் ஆற்றில் நீரின் அளவு அதிகமாக இருந்துள்ளது. அதனால் தாயும் , இரு குழந்தைகளும்  ஆற்றிலேயே சிக்கிக்கொண்டனர்.
 
அந்த நேரத்தில் அங்கு அந்துகொண்டிருந்த  மிசாமாரி என்ற பகுதியில் வசித்து வந்த 11 வயதுச் சிறுவனனான உத்தம் டடி என்பவர், ஆற்றில் அவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறியடித்துப்போய், அவர்களைப் காப்பாற்ற எண்ணி ஆற்றில் குதித்து மூவரையும் காப்பாற்றினார்.
 
இதனைப் பார்த்த சிறுவனின் தீரமிக்க செயலையும், மனித நேயத்தையும் பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
 
இந்த இளம் வயதில் சிறுவனின் மனோதைரியத்தை குறித்து கேள்விப்பட்ட அங்குள்ள  மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ், சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
 
மேலும்  சிறுவன் உத்தம் டடிக்கு  வீர தீரத்துக்கான விருதுக்கு பரிந்துரைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  தற்போது இந்த தகவல் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்