பிட்காயின் எதிரொலி: டிஜிட்டலுக்கு மாறும் ஹவாலா பிஸ்னஸ்...

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:45 IST)
ஹவாலா பண பரிமாற்றம் தற்போது ஆன்லைன் முறைக்கு மாறி வருகிறது. இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவத்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினால் இந்தியாவில் ஹவாலா ஏஜென்ட்டுகள் பண மாற்றத்தை செய்து வருகின்றனர். 
 
ஹவாலா வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி உயர் அதிகாரி ஒருவர், ஹவாலா ஏஜென்ட்டுகள் பிட்காயின் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் மூலம் எளிதில் பணத்தை மாற்ற முடியும். மேலும், கைக்கு விரைவில் பணம் கிடைத்து விடும் என தெரிவித்துள்ளார். 
 
பிட்காயின் மதிப்பு இணையதளங்களில் உள்ள வாலெட்கள் முறையில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை நடைமுறையில் இல்லாததால் இது போன்ற ஹவாலா பண பரிமாற்றத்தை கண்டறிவது மிக கடினமான இருப்பதாகவும் தெரிகிறது. 
 
பிட்காயின் பயன்பாடு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் விசாரணை ஆணையங்களுக்கு இந்த பிட்காயின் சார்ந்த வழக்குகள் சவாலான விஷயமாக மாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்