ஹரியானா சட்டசபை தேர்தல்.! ஆம் ஆத்மி தனித்துப் போட்டி.!!

Senthil Velan
திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:03 IST)
ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி  தனித்துப் போட்டியிடுகிறது. 20 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை அந்த கட்சி வெளியிட்டுள்ளது. 
 
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.  வேட்பு மனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 12 ஆம் தேதி கடைசி நாளாகும்.
 
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. 
 
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கூட்டணி குறித்த முடிவை டெல்லி மேலிடம் அறிவிக்காவிட்டால் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்போம் என ஹரியானா மாநில ஆம் ஆத்மி அறிவித்தது. 


ALSO READ: மிலாடி நபி அரசு விடுமுறை - தேதி மாற்றம்..! எப்போது தெரியுமா.?
 
இந்நிலையில்  முதல் கட்டமாக 20 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதனால் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்