ஆக்கிரமிப்புகள் அகற்றம்....அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (13:19 IST)
அசாம் மாநிலம் கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்ரமிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் பெண்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இப்பகுதியில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு  இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது.

இதையடுத்து,  அதிகாரிகள் ஜேசிபி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அங்குள்ள ஆக்கிரம்ப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு பெண்கள் தங்கள் உடைகளை களைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அரைநிர்வாணத்தில் இருந்து முழு உடைகளையும் கழற்றி போராடிய அவர்களை அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்