வங்கக்கடலில் 'குலாப்' புயல்

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (09:41 IST)
வங்கக்கடலில்  அடுத்த 12 மணி நேரத்தில் குலாப் புயலாக உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது. 
 
காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் தெற்கு ஓடிசா - வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்