கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் கோளாறு: ஜிஎஸ்எல்வி -எப் 10 ராக்கெட் தோல்வி

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (06:56 IST)
கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் கோளாறு: ஜிஎஸ்எல்வி -எப் 10 ராக்கெட் தோல்வி
கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி -எப் 10 ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனால் இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
புவி வெப்ப தட்ப வெட்ப நிலையை கண்காணிப்பதற்காக இன்று அதிகாலை ஜிஎஸ்எல்வி -எப் 10 என்ற ராக்கெட் ஏவப்பட்டது. இதில் அதிநவீன செயற்கைகோள் இருந்தது என்பதும் இதன் மூலம் இந்தியாவில் உள்ள தட்ப வெட்ப நிலை வானிலை நிலவரங்கள் துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது 
 
இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் திடீரென கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மூன்றாவது நிலையை செயற்கைகோள் தாண்டவில்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் காரணமாக ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்