பசுக்களை சாப்பிடும் புலிகளுக்கு என்ன தண்டனை?; கோவா எம்எல்ஏ கேள்வி

Arun Prasath
புதன், 5 பிப்ரவரி 2020 (17:24 IST)
கோப்புப்படம்

பசுக்களை சாப்பிடும் மனிதர்களை தண்டிக்கும் போது, அதனை சாப்பிடும் புலிகளுக்கு என்ன தண்டனை? என கோவா எம்.எல்.ஏ. சர்ச்சில் அலிமாவோ சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் கோவா மாநிலத்தின் மஹாடாயி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பெண் புலியையும் அதன் 3 குட்டிகளையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொன்றுள்ளனர். அவர்களின் பண்ணையிலுள்ள கால்நடைகளை புலிகள் தாக்கிக் கொன்றதனால் அப்பகுதி மக்கள் புலிகளை கொன்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இது குறித்து கோவா சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சர்ச்சில் அலிமாவோ “பசுவை கொன்று உண்ணும் புலிக்கு என்ன தண்டனை? மனிதன் பசுவைக் கொன்று சாப்பிடும் போது அவன் தண்டிக்கப்படுகிறான்” என கூறியுள்ளார்.

மேலும், ”மனிதர்கள் பசுக்களை சாப்பிடும்போது, மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர், அங்கே பசு முக்கியமானதாகப் படுகிறது. ஆனால் வனவிலங்குகள் என்று வரும்போது அங்கே புலிகள் முக்கியமானதாகப்படுகின்றன” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்