கோவாவில் பிப். 14 விடுமுறை - எதற்கு தெரியுமா?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (14:03 IST)
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 
கோவா மாநிலத்தில் வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 
இதனால் வரும் 14 ஆம் தேதி கோவாவில்  உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்