பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் மகன்: தற்கொலை செய்த மாணவி!

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (14:43 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாணவி ஒருவருக்கு தான் படிக்கும் பள்ளியின் முதல்வரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு அந்த பள்ளியின் முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று அந்த மாணவிக்கு பள்ளி முதல்வர் அழைப்பதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து அவர் முதல்வரின் அறைக்கு சென்றார். ஆனால் அங்கு பள்ளி முதல்வருக்கு பதிலாக அவரது மகன் தான் இருந்துள்ளார். அப்போது அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடது என்றும் மிரட்டியுள்ளார்.
 
ஆனால் இதனை கவனித்த சிலர் பாதிக்கப்பட்ட மாணவின் சகோதரனிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் சகோதரன் ஆத்திரத்தில் பள்ளி முதல்வரின் மகனுடன் சண்டைப்போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தனது அறையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனையடுத்து மாணவியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்