ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 4ஜி இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் நடைபெற்ற போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 4ஜி இணையதள சேவை நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் இருந்த காலத்திலும் கூட 4ஜி இணையதள சேவை அம்மாநிலத்தில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 4ஜி சேவை அங்கு தொடங்கலாம் என்று செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதல் 4ஜி இணைய சேவை தொடக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்