உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி.. சிவசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (17:27 IST)
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிவசேனா கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியானது.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இதயத் தமனியில் உள்ள அடைப்புகளை கண்டறிய சோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது மகன் தனது எக்ஸ்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே அவர்களின் பரிசோதனை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அனைவரின் ஆசீர்வாதத்துடன், அவர் நன்றாக இருக்கிறார்,  மக்களுக்கு சேவை செய்யவும், மக்களுக்காக பணியாற்றவும், அவர் தயாராக இருக்கிறார் என்று உத்தவ் தாக்கரே மகன் பதிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், முழு உடல் பரிசோதனை செய்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு தனது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டு உள்ளார். எனவே கட்சி தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் சிவசேனா கட்சியின் சார்பில் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்