மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதி எப்போது? தேர்தல் கமிஷன் தகவல்..!

Mahendran

ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (13:45 IST)
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருப்பதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் நவம்பர் 26ஆம் தேதி பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை இடங்கள் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி பதவிக்காலம் முடிவடைகிறது.

இதனை அடுத்து, இந்த இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு பின்னர், அதாவது நவம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது என்பதும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் இந்த முறையும் இந்த இரு மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்