கோவில் கோபுரத்தில் மோதி விபத்தான விமானம்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:00 IST)
மத்திய பிரதேசத்தில் பறந்த பயிற்சி விமானம் ஒன்று கோவில் கோபுரத்தில் மோதி விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் சோர்ஹட்டா விமான ஓடுதளம் உள்ளது. இப்பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்தன்று மூன்று பேர் கொண்ட பயிற்சி விமானம் அப்பகுதியில் பறந்து சென்றுள்ளது.

கேப்டன் விஷால் யாதவ் அந்த விமானத்தை இயக்கிய நிலையில் பயிற்சி பெறுபவர் இருவர் அதில் இருந்துள்ளனர். இந்த விமானம் தாழ்வாக பறந்து சென்றபோது அப்பகுதியில் இருந்த கோவில் கோபுரம் ஒன்றின் மீது பலமாக மோதி கீழே விழுந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் விமானி விஷால் யாதவ் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்