கொரோனா வார்டில் திடீரென பலியான 5 பூனைகள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (08:43 IST)
கொரோனா வார்டில் திடீரென பலியான 5 பூனைகள்
உலகிலுள்ள மனித இனத்தையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தாக்கியது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதர்களுக்கே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்கள் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் விலங்குகளை தாக்கினால் அதன் விளைவு அதி பயங்கரமாக இருக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர். இதனை அடுத்து கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட புலிகள் மற்றும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வார்டில் இருந்த 5 பூனைகள் அடுத்தடுத்து திடீரென பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது. புதிதாக கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அங்கே குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஐந்து பூனைகள் அடுத்தடுத்து திடீரென பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பூனை பலியானதாகவும் அதன் பின்னர் அடுத்தடுத்து நான்கு பூனைகள் பலியாகியுள்ளதாகவும் இதில் இரண்டு ஆண் பூனை, இரண்டு குட்டி பூனை, ஒரு பெண் பூனை என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
கொரோனா வார்டை சுற்றிக் கொண்டிருந்த இந்த பூனைகள் திடீரென பலியாகி இருப்பது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலியான பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அந்த பூனைகளை உடல்கள் சோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது வரை இந்த பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பதும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் கூட எதுவும் அந்த பூனைகளிடம் இடமில்லை என்பதும் ஒரு ஆறுதலான செய்தியாக உள்ளது. இருப்பினும் சோதனையின் முடிவில் தான் உண்மை தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்