இரண்டு கைகளை இழந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:02 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு கைகளும் இழந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


 

 
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்தவர் விக்ரம் அக்னிஹொத்ரி. இவர் இரண்டு கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் போராடி ஒட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். 
 
இரண்டு கைகளும் இல்லாமல் கார் ஓட்டுவதற்கு, ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் விக்ரம் அக்னிஹோத்ரி.கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் படிப்பாளி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்த போது, அதிகாரிகள் இவரால் கைச்சைகை செய்ய முடியாது என்பதால் விண்ணப்பதை நிராகரித்துவிட்டனர்.
 
அதன்பின்னர் பல முறை முயற்சி செய்து பொராடி, இந்தூர் பகுதியிலே சுமார் 14,000 கி.மீ தூரம் கார் ஓட்டி, அதன்பின்னரே அவருக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்துள்ளது. ஊனமுற்றோர் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் மந்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து ஓட்டுநர் உரிமம் கோரி மனு கொடுத்துள்ளார். மேலும் ஒட்டுநர் ஒரிமம் பெறுவதற்கு ஆகஸ்டு மாதம் இந்தூரில் இருந்து லடாக் வரை தொடர்ச்சியாக 20 நாட்கள் கார் ஓட்டி பயணம் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்