முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விடுதி அறை: பெரும் சர்ச்சை

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:49 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக அதிகாரிகள் வாடகைக்கு விட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆந்திராவில் உள்ள காக்கிநாடா என்ற பகுதியில் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 250 பொறியியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன 
 
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகளில் சிலவற்றை  கடந்த ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் திருமண விழாவிற்காக வாடகைக்கு ஒரு குடும்பத்தினர் எடுத்துள்ளனர். இந்த நாட்களில் திருமணத்திற்காக வந்த உறவினர்கள் அங்கு இறங்கி உள்ளனர்
 
இரண்டு நாட்கள் முடிந்து 20 ஆம் தேதி அறைகளை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் ஒரு அறை முழுவதும் ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட அறைகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்