தீபிகா படுகோனே குடியிருப்பில் தீ விபத்து!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (17:38 IST)
மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பியூமவுண்ட். இங்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 33 மாடிகள் உள்ளன. 
 
இந்த குடியிருப்பின் மேல் பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீர்ர்கள் உடனடியாக அங்கு விரைந்து அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
குடியிருப்பின் மேல் பகுதியில் தீ பிடித்துள்ளதால் தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்