டில்லி விமான நிலையத்தில் மாயமான 56 கிலோ தங்கம்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (14:56 IST)
தில்லி விமான நிலையத்தில், பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 59 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
முறைகேடான வழியில் கொண்டுவரப்படும் தங்கம், விமான நிலையத்தில் இருக்கும் சுங்கதுறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பு நிறைந்த கிடங்கில் பத்திரமாக சீல் வைக்கப்படுவது வழக்கம்.
 
இப்படி, டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.18.3 கோடியாகும்.
 
அந்த தங்கத்தை அங்கிருந்து எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தங்கம் போல் மின்னும் ஒரு போலீயான மஞ்சள் நிற உலோகக் கட்டிகளை யாரோ வைத்துள்ளனர். இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சுங்கத்துறை அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும், அந்த அறைக்குள் அனுமதி கிடையாது. எனவே அவர்களில் ஒருவர்தான் இதை செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்