16 வது நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்கள் உள்ளதாக தகவல்

Webdunia
செவ்வாய், 20 மே 2014 (11:18 IST)
நாடெங்கும் நடந்து முடிந்த 16 வது நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில்தான் இதுவரை இல்லாத அளவிற்கு 61 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
16 வது நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 நாடாளுமன்ற  உறுப்பினர்களில் 61 பேர் பெண்கள் எனத் தெரிகிறது.
 
தற்போது கலைக்கப்பட்ட 15 வது நாடாளுமனறத்தில் 58 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். 
 
இந்த நாடாளுமனறத்தில் இஸ்லாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 22 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.