போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கு இடமில்லை: விவசாயிகள் பிடிவாதம்

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (07:42 IST)
புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
நேற்று குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற நேரத்தில் டிராக்டர்கள் பேரணியை நடத்திய விவசாயிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி ஒருசில இடங்களில் டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்தது என்பதும் இதனால் காவல்துறையினர் தரப்பினர் ஒரு சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலைகளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை டெல்லியில் நீடிக்கும் முற்றுகைப் போராட்டத்தை கைவிடு  பேச்சுக்கே இடமில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து டெல்லியில் கூடி இருக்கும் விவசாயிகளை கலைப்பதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்குமா அல்லது மத்திய அரசு அதிரடியாக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்