விவசாயிகள் மீது தடியடி: அரசியல் தலைவர்கள் கண்டனம்

செவ்வாய், 26 ஜனவரி 2021 (19:26 IST)
விவசாயிகள் மீது தடியடி: அரசியல் தலைவர்கள் கண்டனம்
புதிய வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வரும் நிலையில் இன்று உச்ச கட்டமாக டிராக்டர் பேரணியை நடத்தினார்கள் என்பதும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விவசாயிகள் ஒரு சிலர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவது கண்டனத்துக்குரியது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வரட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார் 
 
விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தாமல் கொண்டுவந்த மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்