சொன்னதை செய்யாத மத்திய அரசு?! – இன்று “துரோக தினம்” கடைபிடிக்கும் விவசாயிகள்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:23 IST)
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று துரோக தினம் கடைபிடிக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக டெல்லியில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது.

ஆனாலும் விவசாயிகள் மேலும் சில கோரிக்கைகள் விடுத்திருந்தனர். என்றாலும் போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்பினர். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டாலும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறியுள்ள விவசாய அமைப்புகள் இன்று நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து துரோக தினம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்