பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில் விவசாயிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு விவசாயி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் இதே இடத்தில் நடைபெறும் இரண்டாவது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருட காலத்திற்கு மேல் மத்திய அரசு தங்களுடைய கோரிக்கைகளை செவிசாய்க்கவில்லை என்பதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக சக விவசாயிகள் கூறி உள்ளனர்.
விஷம் குடித்த விவசாயி, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டதாகவும், மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றாததால் தான் அவர் விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகவும் விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.