தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – பி எஃப் வட்டி விகிதம் உயர்வு !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (08:32 IST)
தொழிலாளர் வைப்பு நிதியான பி எப் தொகைக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு தொகை அவர்களின் வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேப் போல நிறுவனத்திடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. இந்த தொகையானது தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அல்லது அவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் போது அந்த தொகையை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தொகைக்கு இதுவரை 8.55 சதவீதத்தை உயர்த்த சொல்லி கோரிக்கை எழுந்தது. இதற்காக நடத்தப்பட்ட கூட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது அந்த முடிவுக்கு வைப்பு நிதி அறங்காவலர்கள் மத்திய வாரியம் (சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 6 கோடி பேர் பயனடைவார்கள் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்