ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? மத்திய அரசு அறிவிப்பு

Siva
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (14:48 IST)
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 இதன்படி, 11.75 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசுக்கு 2029 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பல்வேறு வகை ரயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்