இந்த புத்தக திருவிழாவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில், நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில், தமிழக நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார்.
எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது, எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் புரிந்து கொள்ளவும் முடியாது. இன்னொரு வாழ்க்கை விஷயத்தை பற்றி புரிந்து கொள்ள மிக சிறந்த வழி புத்தகங்கள் மட்டும்தான்.
முன்னதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருனாநிதி ஆகியோர் விழிப்புணா்வு ராட்சத பலூனை பறக்க விட்டனர்.
இவ்விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.