இனி 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.. ஆச்சரியப்படுத்தும் முதல்வரின் திட்டம்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (13:36 IST)
இனி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதனை குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ”இந்தியாவிலேயே டெல்லியில் தான் மின் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இந்தியாவில் டெல்லியில் மட்டுமே மின்சாரத் துறை சிறந்து விளங்குகிறது. இங்கு தான் 24 மணிநேரமும் மின்சாரம் இடைவிடாது விநியோகம் செய்யப் படுகிறது” என்று கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திட்டத்தை குறித்து பலரும் இணையத்தளத்தில் பாராட்டி எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்