1.80 லட்சம் டன் இந்திய கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (19:05 IST)
இந்திய கோதுமையை 1.80 டன்கள் எகிப்து நாடு இறக்குமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த மே மாதம் இந்தியாவில்  இருந்து 5 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்போவதாக ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் திடீரென இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள காரணத்தினால் தற்போது புதிதாக 1.80 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் எகிப்து நாட்டின் உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
எகிப்து நாட்டில் வாழும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கோதுமை ரொட்டி தான் சாப்பிடுகின்றனர் என்பதால் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து தனது கோதுமை தேவையை எகிப்து நாடு பூர்த்தி செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்