தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஹேமமாலினி மீது நடவடிக்கை

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (18:04 IST)
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 4 வேட்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதன்படி, பாரதீய ஜனதா கட்சியின் மதுரா தொகுதி வேட்பாளர் ஹேமமாலினி மற்றும் ராஷ்டிரிய லோக் தள் கட்சி வேட்பாளர் ஜெயந்த் சவுதாரி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான செலவுகளை மறைத்து, குறைவான தொகையை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.  
 
இதேபோல். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அனுஜ் கார்க் மீது முறையான அனுமதியின்றி ஒலிபெருக்கியை வைத்து வாகனத்தில் பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் மகேந்திர சிங்கிற்கு எதிராகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.