தேர்தலில் புது திருப்பம்: குற்றவாளிகள் போட்டியிட வாழ்நாள் தடை?

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (11:16 IST)
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குற்ற வழக்குகளில் 4 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 6 ஆண்டுகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு விட்டாலே 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்