டிஆர்பியை அதிகரிக்க மீண்டும் ராமாயணம் சீரியல்

Webdunia
திங்கள், 15 மே 2017 (17:30 IST)
தூர்தர்சன் சேனலில் டிஆர்பியை அதிகரிக்க மீண்டும் ராமாயணம், மகாபாரதம் சீரியல்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


 

 
செயற்கைகோள் சேனல்கள் வருகையால் டிடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது. தற்போது டிடி சேனல் தனது டிஆர்பியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
 
அதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். மண்டல வாரியாக சேனல்கள் ஒளிபரப்ப தொடங்கியும் அதனால் தனது டிஆர்பியை அதிகரிக்க முடியவில்லை.
 
ஒரு காலங்களில் ஞாயிற்று கிழமை என்றால் அனைவரும் பார்க்கும் ஒரே சேனல் தூர்தர்சன் தான். ஆனால் தற்போது அதன் நிலை மாறிவிட்டது. எனவே தூர்தர்சன் சேனல் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்