இரண்டு மணி நேரமாக இதயத் துடிப்பு இல்லாத நோயாளி ஒருவரை எய்ம்ஸ் மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபா காந்த் என்பவர் கடந்த 30ஆம் தேதி இதய பிரச்சனை காரணமாக ரான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமானதால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து அவரது இதயத்துடிப்பு திடீரென நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளி உயிர் இழந்துவிட்டதாகவே கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவக் குழு தொடர்ந்து நுரையீரல் மற்றும் இதயத்தை வேலை செய்யக்கூடிய ஈ சி ஆர் சிகிச்சை தந்து கொண்டிருந்த நிலையில், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது.
ஆரம்பத்தில் வழக்கத்துக்கு மாறாக துடித்தாலும், அதன்பின் படிப்படியாக இதயத்துடிப்பு மேம்பட தொடங்கியதால் விட்டதாகவும், தற்போது நோயாளி ஆபத்தான நிலையில் இருந்து தப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது.
2 மணி நேரம் இதயத்துடிப்பே இல்லாமல் இருந்த ஒரு நோயாளியை எய்ம்ஸ் மருத்துவர்கள் உயிருடன் காப்பாற்றி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.