குடியரசு தலைவரை திடீரென சந்தித்த தோனி: அடுத்த திட்டம் என்ன?

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (08:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி நேற்று ராஞ்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்ற விபரம் இன்னும் வெளியே தெரியவில்லை 
 
 
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாடியபோது அந்த அணியில் தோனி தேர்வு செய்யப்படவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் தோனி பாஜகவில் சேர்ந்து அரசியலில் குதிக்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக ஜார்கண்ட் மாநிலம் சென்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
 
 
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேற்று தோனி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காரணம் தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்