கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு விதியே காரணம்: சாமியார் போலே பாபா

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (11:24 IST)
கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு விதியே காரணம் என சாமியார் போலே பாபா கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தனது ஆன்மீகக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து சாமியார் போலே பாபா கருத்து தெரிவித்த போது ’பிறக்கும்போது ஒவ்வொருவரும் இறுதியில் இறக்கத்தான் போகிறோம், தவிர்க்க முடியாத விஷயத்தை யாரால் தடுக்க முடியும்? மரணம் என்பது விதி’ என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னதாக உத்தர் பிரதேசம் மாநிலத்தில் சாமியார் போலே பாபா ஆன்மீக நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான நிலையில்  இந்த துக்ககரமான சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று போலே பாபா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
 
 சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும்  தெரிவித்திருந்த நிலையில் தற்போது 121 பேர் உயிரிழந்ததற்கு விதியே காரணம் என சாமியார் போலே பாபா கருத்து தெரிவித்துள்ளது பெரும் முரணாக உள்ளது என்று அவரது பக்தர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்