ஆத்தி என்னா அடி! மாணவிகளுக்கிடையே சண்டை! – வைரலான வீடியோ!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:20 IST)
டெல்லியில் மாணவிகள் சிலர் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ஆண்கள் சாலைகளில் சண்டை போட்டுக்கொள்வது, அவர்களுக்கிடையேயான கேங் வார் போன்றவை குறித்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆவது உண்டு. தற்போது அதுபோல பெண்கள் சாலைகளில் சண்டையிட்டு கொள்ளும் வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

பொதுவாக பள்ளிக் காலங்கள் என்றாலே மாணவ, மாணவிகளிடையே சண்டை, சச்சரவு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான்! ஆனால் சில சமயம் அளவு கடந்து செல்லும் போது அது ஆபத்தானதாகவும் மாறி விடுகிறது.

தற்போது டெல்லியில் இரண்டு மாணவிகள் குழுக்களிடையே நடந்த கேங் சண்டை வைரலாகி வருகிறது. இதில் மாணவிகள் சிலர் தங்களுக்குள் பலமாக உதைத்து தாக்கி கொள்கின்றனர். சுற்றிலும் நிற்கும் பலர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் இதை போன்ற வன்முறைகளை ஆதரிப்பது ஆரோக்கியமான விஷயமல்ல எனவும் சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்