பரிசோதனைக்கு ஒத்துக்கொள்ள மாட்டோம்! அடம்பிடிக்கும் மக்கள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (14:14 IST)
கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவிப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மதரீதியான மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா இருப்பது சமீப காலங்களில் தெரிய வந்துள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுகொண்டதன் பேரில் பலர் முன்வந்து பரிசோதனைகளை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் டெல்லியில் நிலைமை வேறாக உள்ளது. அங்கு பலர் பரிசோதனைக்கே ஒத்துழைக்க மறுப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 216 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேரை பரிசோதித்ததில் 23 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பலர் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அவர்களது இந்த செயல்களால் மருத்துவ ஊழியர்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்