பிறந்த ஒருசில மணி நேரத்தில் நடக்க முயற்சித்த குழந்தை: ஒரு அதிசய தகவல்

Webdunia
திங்கள், 29 மே 2017 (05:44 IST)
எந்த ஒரு குழந்தையும் பிறந்த சில மாதங்கள் கழித்தே, தவழ ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில் நேற்று பிறந்த ஒரு குழந்தை பிறந்த ஒருசில மணி நேரங்களிலேயே நர்ஸ் உதவியால் நடக்க ஆரம்பித்த அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.



 


டெல்லியில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையை நர்ஸ் குளிப்பாட்டிவிட்டு துடைத்து கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை நடக்க முயற்சித்துள்ளது.அந்த குழந்தையை நர்ஸ் அதிசயமாக பார்த்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  ஒரு குழந்தை சற்று அதிசயமாக, பிறந்து சில மணிநேரத்திலேயே, நர்ஸின் உதவியோடு, நடக்கப் பழகும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்