டெல்லியில் காற்று மாசை குறைக்க அவசர சட்டம்! மீறினால் கோடி ரூபாய் அபராதம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (11:27 IST)
டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால் மாசுபாட்டை குறைக்க அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்படலம் போல தூசு மண்டலமாக காட்சியளிக்கிறது டெல்லி சாலைகள்.

இந்நிலையில் காற்று மாசுபாட்டை குறைக்க கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் புதிய அவசர சட்டத்தை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி வாகனங்கள் இயங்க நேர கட்டுபாடு முதலியவை விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடு சட்டங்களை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்