டீப் ஃபேக் வீடியோ மூலம் நடிகர் ரன்வீர் சிங் பிரச்சாரமா? சைபர் கிரைம் போலீசில் புகார்..!

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (14:13 IST)
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு சென்ற போது, ரன்வீர் சிங் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து பேசியதாக பரவிய வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு ரன்வீர் சிங் பேசியபோது அவரது வீடியோவை டீப் ஃபேக் அரசியலுக்கு மர்ம நபர்கள் பயன்படுத்தியுள்ளனர். வீடியோவில் இருந்த காட்சிகள் உண்மையாக இருந்தாலும், டீப் ஃபேக் மூலம் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

டீப் ஃபேக் மூலம் பாஜகவை விமர்சித்து, காங்கிரஸுக்கு ஆதரவாக ரன்வீர் சிங் பேசியது போன்று  வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. எனவே இந்த டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக, ரன்வீர் சிங்கின் செய்தி தொடர்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறாது.

ஏற்கனவே இதே போல் அமீர் கானின் டீப் ஃபேக் வீடியோவும் வெளியாகி சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்