மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (18:05 IST)
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில ஆளுநர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் இரு பிரிவினர்கள் மத்தியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தை அடக்க மத்திய மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் கலவரம் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் மணிப்பூரில் 2 மாணவர்களை கடத்தி  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் வருத்தம் தெரிவித்ததுடன், ‘’குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவோம் என உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில ஆளுநர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்