மிக தீவிர புயலாக மாறும் பிபோர்ஜாய்; கரையை கடப்பது எப்போது? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:18 IST)
அரபி கடலில் உருவாகியுள்ள பிபோர்ஜாய் அதி தீவிர புயலாக உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தென்கிழக்கு , மத்திய கிழக்கு அரபிக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. பிபோர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக அரபி கடலோர மாநிலங்களாம கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிபோர்ஜாய் மும்பைக்கு சுமார் 600 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அதி தீவிர புயலாக வலுவடையும் பிபோர்ஜாய் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ண்ட்து ஜூன் 15ம் தேதி பாகிஸ்தான் அதை ஒட்டிய சவுராஷ்டிரா பகுதிகள் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்