13 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

செவ்வாய், 6 ஜூன் 2023 (16:49 IST)
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக வெயில் அடித்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்