டைரக்டர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (16:10 IST)
பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கும் படத்தின் டைரக்டர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு என்று பஞ்சாயத்து தலைவரான சாது கூறியுள்ளார்.


 

 
தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘டாய்லட் ஏக் பிரேம்காதா’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. கதைப்படி கதாநாயகன் மதுரா அருகே உள்ள நந்தகாவன் கிராமத்தைச் சேர்ந்தவர். கதாநாயகி பர்ஸானா கிராமத்தை சேர்ந்தவர்.
 
இந்த இரு கிராமங்களிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. கிருஷ்ணன் கதைப்படி இரு கிராமங்களும் ஒரு தொடர்பு உண்டு. கிருஷ்ணன் நந்தகாவன் கிராமத்தை சேர்ந்தவர். ராதை பர்ஸானா கிராமத்தௌ சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.
 
எனவே அந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே திருமண உறவு கிடையாது. இதனால் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கதை மற்றும் கதையின் தலைப்பையும் மாற்ற வேண்டும், இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து மதுராவை சுற்றியுள்ள 20 கிராமங்களின் பஞ்சாயத்து சாதுக்கள் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்தில் மஹா சாது ஒருவர், இந்த படத்தை இயக்கும் டைரக்டர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு என்று கூறினார்.
 
இதையடுத்து படக்குழுவினர் வேறு இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்