கடவுள் இருக்கான் குமாரு படம் வெளியானதில் இருந்து சமூக வலதளமான டுவிட்டர் ரணகளம் ஆகியுள்ளது. நடிகர் சிம்பு இந்த படத்தின் வெற்றி குறித்து நாசூக்காக கலாய்த்தது போய் தற்போது லட்சுமி ராம்கிருஷ்ணன் சண்டை அணல் பறக்கிறது.
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்தி காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்து கோபமடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த படத்தில் தன்னுடைய நிகழ்ச்சியை கலாய்த்த நடிகர் ஆர்ஜே பாலாஜியை தேடிச்சென்று டுவிட்டரில் கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்தும் மவுனமாக வேடிக்கை பார்த்த ஆர்ஜே பாலாஜியை ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய் கோழையா என மீண்டும் சீண்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் நான் இயக்கி இருந்தால் என்னை திட்டுங்கள். நான் நடிகன், காசு கொடுத்தா நடிக்கிறேன் அவ்வளவு தான் என பதில் அளித்தார்.
இதனையடுத்து சமூக வலைதளத்தில் சண்டை முற்றியது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக ஆர்ஜே பாலாஜிக்கு ஆதரவாக ரசிகர்கள் களம் இறங்கினர். இதனால் சண்டை முற்றிப்போக ஒரு கட்டத்தில் ரெண்டு பொண்டாட்டிக்காரனும், சைல்டு அபியூசரும் சொன்னா, கிண்டல் பண்ணினா நாங்க நிகழ்ச்சி பன்றத நிறுத்தமாட்டோம் என கூறிவிட்டு சமூக வலைதளங்களுக்கு டாட்டா காட்டி சென்றுவிட்டார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் யாரை ரெண்டு பொண்டாட்டிக்காரன், சைல்டு அபியூசர் என கூறினர் என்ற புதிய விவாதம் எழும்பியுள்ளது.