பீகார் மாநிலம் சமஷ்டிபூர் என்னும் இடத்தில் பெண் ஒருவரை ஊரே வேடிக்கை பார்க்க, ஒரு கும்பல் கொலைவெறியுடன் உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உஷா தேவிக்கும் அவரது கணவர் அசோக் பவனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் உஷா தேவி அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் அசோக் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணை வீதியில் வைத்து ஆளுக்கு ஒரு உருட்டுக்கட்டையால் சரமாரியாக கொடூரமாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: Cover Asia Press
இந்த வீடியோ காட்சி வெளியாகி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூறிய காவல்துறை தரப்பு, இறந்த அசோக்கின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், சிகிச்சைக்கு சேர்த்துள்ள உஷா தேவியிடம் அவர் குணமானவுடன் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.