12ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற பசு காவலர்கள்.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:09 IST)
பசு காவலர்கள் என்று அழைக்கப்படும் சிலர் பசுவை கடத்தி சென்றதாக தவறாக சந்தேகப்பட்டு 12ஆம் வகுப்பு சிறுவனை சுட்டு கொலை செய்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில வட மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் சமூக விரோத செயல்களை செய்து வருவதாகவும் அவர்களை மத்திய மற்றும் மாநில அரசு கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹரேயான மாநிலம் பரிதாபாத் என்ற பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த காரில் பசு கடத்தப்படுவதாக தவறாக நினைத்து பசு பாதுகாப்பு நபர்கள் 12 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.

காரில் பசுவை கடத்திச் செல்வதாக பசு பாதுகாப்பு நபர்களுக்கு தகவல் வந்ததை எடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆரியன் சென்ற காரை துரத்தி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் அவர்கள் காரை நோக்கி சுட, மாணவன் ஆரியனின் மார்பில் குண்டு பாய்ந்ததாகவும் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்