இந்த நிலையில் பாஜக ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கு வாக்கு வங்கி அந்த கட்சிக்கு 11% சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இப்போதைய நிலவரப்படி ஹரியானாவில் காங்கிரஸ் கை ஓங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தை பொருத்தவரை சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் இந்த இரு யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் முடிவை கணிக்க முடியாத அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.